உடல் நலத்திற்கு சைக்கிள் ஓட்டம் மிகவும் கஷ்டமான உடற்பயிற்சிகளில் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் சீரான சைக்கிள் சவாரி மூலம் பெற முடியும்.சைக்கிள் ஓட்டுவது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது.
நல்ல தூக்கம் முதற் கொண்டு பதற்றத்தையும் மன இறுக்கத்தையும் குறைக்கும்.இரத்தத்தில் கொலஸ்ட்ரோல் அளவை கட்டுப்படுத்தி உடல் சீராக வைத்திருக்க துணை புரிகிறது.
முதுமை ஏற்படுவதையும் வைரஸ்களையும் பக்டீரியாக்களையும் எதிர்த்து போராடுவதற்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது.ஆனால் இந்த நன்மைகளை பெற வேண்டுமானால் தினசரி 25 நிமிடமாவது சைக்கிள் ஓட வேண்டும்.அல்லது நடக்க வேண்டும்.
போதிய உடல் உழைப்பின்றி பலர் நம்மத்தியில் இருக்கிறார்கள்.இவர்கள் தினமும் காலையில் குறிப்பிட்ட உடலுழைப்பை தாமாகாவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
Recent Comments