மேற்கிந்திய தீவு அணியுடனான கிரிக்கெட் தொடரில் இருபத்துக்கு இருபது போட்டிகளுக்கு தசுன் சானக்க அணித் தலைவராக பெயரிடப்பட்டிருந்தார்.இருப்பினும் அவரின் விசா பிரச்சினை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் அறிக்கை கோர முடிவு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டையில் உள்ள சூரியவௌ பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அத்துடன் கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நபர்கள் குறித்தும் அமைச்சர் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை தசுன் சானக்கவின் விசா பிரச்சினை காரணமாக மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணத்திற்கு பயணிக்கவில்லை எனவும் குறித்த போட்டியின் இலங்கை அணி தலைவர் பதவி ஏஞ்சலோ மெதிவ்ஸுக்க வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Recent Comments